இந்த காலத்தில் நடிகர்கள் சுயம்புவாக வளர்கிறார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
PR டீம் மற்றும் சில பல lobby மூலம் நடிகர்களின் பிம்பம் ஊதி பெரிதாக்கபட்டு ( ஒரு பிராய்லர் கோழி போல) , மக்கள் மனதில் திணிக்க படுகிறது என்றே தோன்றுகிறது.
சமீபத்திய பிராய்லர் கோழி தான் இந்த சிவகார்த்திகேயன்
சில சம்பவங்கள்
1 . கோட் படத்தில் SK வலுக்கட்டாயமாக தினிக்கபட்டு விஜய்யின் துப்பாக்கியை வாங்குகிறார். இது சோசியல் மீடியாக்களில் விவாதம் ஆக்க படுகிறது.
2.அஜித் "welcome to big league" என்று SKயிடம் கூறுகிறார். இது செய்தி ஆக்கப்பட்டது
3.ஒரு பேட்டியில் SKயிடம் விஜய்யின் துப்பாக்கி எப்படி இருக்கிறது என்று கேட்க பட்டது, தற்செயலாக நடந்தது? இதற்கு அவர் அளித்த பதில் செய்தி ஆக்கப்பட்டது
4.அமரன் படத்திற்கு கமல் என்ற லேபிள் ஒட்டி பெரிய அளவில் பிரமோசன் செய்ய பட்டது.
5.நாட்டின் முதலமைச்சரே அமரன் படத்தை திரையரங்குகளில் கண்டு ரசித்தது செய்தி ஆக்கப்பட்டது.
6.படம் வெளியாகி இரண்டு வாரத்தில் கொஞ்சம் டவுன் ஆனவுடன்.. SK ராணுவ உடையுடன் மனைவியை ஆச்சரிய படுத்திய வீடியோ வைரல் ஆகிறது ( வைரல் ஆக்கப்பட்டது?)
7.இதை விட முக்கியம் , கோட், கங்குவா போன்ற பெரிய நடிகர்களின் படங்களின் காட்சிகள் YouTube Shortsகளாக முதல் நாளே வெளிவரும் ஆனால் அமரன் படத்தின் காட்சிகள் மூன்று வாரம் வரை YouTubeல் வெளிவரவில்லை.
மேலே குறிப்பிட்ட அனைத்தும் நான்கு மாத கால கட்டத்துக்குள் நடந்தது, இவை அனைத்தும் தற்செயலாக நடந்தது என்று என்னால் நம்ப முடியவில்லை.
உங்களால் நம்ப முடிகிறதா?
இந்த படம் முன்னூறு கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதில் ஏதும் முறைகேடு இருக்கிறதா என்று தெரியவில்லை..
மக்களை இவ்வளவு எளிதாக ஏமாற்ற முடியும் என்று இவர்கள் நம்புகிறார்கள். அது தான் உண்மை.