எந்த வகையில் இது தீர்வு?.. சிறு வயதில் இருந்து வளர்த்த தன் பெண்ணை இனி அந்த பெற்றோர்கள் பிரிந்து வாழ வேண்டும்...இதில் இருந்து மீண்டு வர அவர்களுக்கு பல வருடம் ஆகும்.. இதற்கு எல்லாம் என்ன பதில்? (எல்லாம் ஒரு போதை இரவுக்காக தூ..)
அதிகாரிகள் ,அரசாங்கம், சட்ட துறை இவை மூன்றும் பல வருடங்களாக இருக்கிறது.. இருந்தும் குற்றம் செய்பவர்களுக்கு பயம் ஏற்பட மாட்டேன் என்கிறது.. இது இவர்களின் தோல்வி தானே?.. இதை அவர்கள் பகிரங்கமாக ஒத்து கொள்ள வேண்டும்....முடியுமா?
அரசியல் வியாதிகளும்.. அதிகாரிகளும்.. பணம் இருந்தால் மட்டும் தான் ஒருவரை மதிப்பீர்களா?...
அஜீத் குமார். நகை திருடினாரா இல்லையா என்று இன்று வரை தெரியவில்லை.. ஆனால் அங்கு சட்டம் வேகமாக வேலை செய்கிறது...24 மணி நேரத்துக்குக் குற்றம் சாட்ட பட்டவர் இறந்து போகிறார்..
இங்கு பெண்ணை காணாம் என்று புகார் அளிக்க சென்றால் , பெண் சாகும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்க படவில்லை.. அதிக பட்சம் அவர்களால் செய்ய முடிந்தது, எல்லாம் முடிந்த பின் suspend
இப்படிப்பட்ட விந்தையான உலகத்தில் தான் நாம் வாழ்கிறோம்...

No comments:
Post a Comment